முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் காலமானார்..!!
முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் கடந்த இரு வாரங்களாக உடல்நிலை சரியில்லாத நிலையில், சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், கடந்த இரண்டு வாரங்களாக டெல்லியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், நட்வர் சிங் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின்போது, 2004-05 காலகட்டத்தில், நட்வர் சிங் வெளியுறவுத் துறை அமைச்சராக பணிபுரிந்து வந்தார். பாகிஸ்தானுக்கான தூதராகப் பணியாற்றிய நட்வர் சிங், 1966 முதல் 1971 வரையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அலுவலகத்திலும் பணிபுரிந்துள்ளார்.
நட்வர் சிங் நாட்டிற்கு செய்த சேவைக்காக, அவருக்கு 1984 ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. “ஒன் லைஃப் இஸ் நாட் எனஃப்” என்ற தலைப்பில் இவரது சுயசரிதை எழுதப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..