ஆந்திராவின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் டி.ஸ்ரீனிவாஸ் காலமானார்…
ஆந்திராவின் ஒருங்கிணைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் டி.ஸ்ரீனிவாஸ் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். இந்த துயர செய்தியை அவரது மகனும் நிஜாமாபாத் எம்.பி.யுமான டி.அரவிந்த் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் ஒருங்கிணைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் டி.ஸ்ரீனிவாஸ் (வயது 76) கடந்த சில நாட்களாகவே இவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வந்துளளர்.
இந்நிலையில் இன்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.. ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அதிர்ஷ்டாவசமாக அவர் உயிர் பிரிந்துள்ளது..
ஆந்திராவின் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், மூன்று முறை எம்.எல்.ஏ.வாகவும், 2009-ம் ஆண்டு ராஜசேகர் ரெட்டி அரசில் உயர் கல்வி மற்றும் இடைநிலைக்கல்வி மந்திரியாக ஸ்ரீனிவாஸ் பதவி வகித்துள்ளார்.
மேலும் அவர் காங்கிரசிலிருந்து விலகி 2016 முதல் 2022ம் ஆண்டு வரை பாரத ராஷ்டிர சமிதி மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். அதன் பின் மீண்டும் காங்கிரசிலேயே இணைந்தார். அவரது மறைவுக்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, மத்திய மந்திரி கிஷன் ரெட்டி, தெலங்கானா மந்திரிகள், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ