மழையில் மிதக்கும் அயோத்தி..! மக்கள் வைத்த குற்றச்சாட்டு..!
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால் சில பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்க ராமர் கோயிலின் மேற்கூரையில் தண்ணீர் வடிந்து வெள்ளம் சூழ்ந்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அயோத்தியின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் ராமர் கோயி்லுக்குச் செல்லும் பாதையில் பக்தர்கள் செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
கோயிலுக்குச் செல்லும் சாலைகள் அனைத்தும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதனுடன் சாலையோரம் இருந்த வீடுகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சாலையின் பல பகுதிகளில் குண்டும், குழிகளும், ஆங்காங்கே பள்ளங்களும் ஏற்பட்டுள்ளன. அயோத்தியில் உள்ள ஸ்ரீராம் மருத்துவமனையும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் சாலை கட்டுமானப் பணிகளில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி துருவ் அகர்வால், அனுஜ் தேஷ்வால், பிரபாத் பாண்டே, ஆனந்த் குமார் துபே, ராஜேந்திர குமார் யாதவ் மற்றும் முகமது ஷாஹித் ஆகிய 6 அதிகாரிகளையும் மாநில அரசு அதிரடியாக நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அகமதாபாத்தைச் சேர்ந்த புவன் இன்ஃப்ராகாம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கும் மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..