குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் பாஜக வின் முன்னை அமைச்சர் ஜெய்நாராயண் வியாஸ் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். பாஜக வின் முன்னாள் அமைச்சரின் இந்த செயலால் அரசியலில் களம் பரபரப்பாகியுள்ளது.
182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக காங்கிரஸ் மட்டுமின்றி மூன்றாவது கட்சியாக ஆம் ஆத்மீ கட்சியின் வருகியால் இதனால் குஜராத் மட்டுமின்றி இந்தியா அரசியலில் கூடுதல் இந்த தேர்தல் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் பாஜக ஆட்சியின் குஜராத் அரசில் அமைச்சராக இருந்த ஜெய்நாராயண் வியாஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரஸில் இணைந்துள்ளார்.
அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற போது பாஜக முன்னாள் அமைச்சர் ஜெய்நாராயண் வியாஸ் மற்றும் அவரின் மகன் சமீர் வியாஸ் ஆகியோர் காங்கிரசில் இணைந்தனர். குஜராத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் பாஜக வின் முன்னாள் அமைச்சர் கட்சி மாறியுள்ளதால் இன்னும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.