தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் அப்படத்தை தெலுங்கில் வெளியிட சிக்கல் இருப்பதாக தகவல் பரவி வந்த நிலையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் வாரிசு படம் மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது என்று அறிவித்துள்ளார்.
வரும் பொங்கலுக்கு வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவித்தனர். இந்நிலையில் தெலுகு மாநிலங்களில் பண்டிகை காலங்களில் மற்ற மொழி நடிகர்களின் படத்தை வெளியிட தடை விதிக்க இருப்பதாக தெலுகு திரை உலகம் அறிவித்து வந்தனர். இதனால் தெலுங்கில் வாரிசு மற்றும் துணிவு வெளியாக சிக்கல் இருக்கும் என்று கூறப்பட்டது.
இதை தொடர்ந்து இக்கட்டான சூழலுக்கு மத்தியில் இரு படங்களும் பொங்கலுக்கு தயாராகி வரும் நிலையில் தற்போது வாரிசு படத்தின் தயாரிப்பாளர் வாரிசு படம் மூன்று மொழிகளிலும் மிக பிரம்மாண்டமாக அதிக தியேட்டர்களில் வெளியாகும் என்று கூறியுள்ளார். தயாரிப்பாளரின் இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் இரு படங்களின் அடுத்ததடுத்த அப்டேட் களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்துகொண்டு இருக்கின்றனர்.