சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!
சர்க்கரை நோய் உள்ளவர்கள் பெரும்பாலும்.., சர்க்கரை நோய் கட்டுப்படுத்துவதாக நினைத்து சில உணவுகள் மூலம் இன்னும் அதிகரித்துக் கொள்கின்றனர். ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கும், சில உணவுவகைகள் பற்றி பார்க்கலாம்.
மைதா பிரட் : சர்க்கரை நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகள் மைதா பிரட் சாப்பிடுவதை தவிர்க்கலாம். மைதாவில் இருக்கும் கொழுப்பு ரத்தத்தில் கலந்து சர்க்கரையின் அளவை இன்னும் அதிகரிக்கச் செய்துவிடும்.
இளநீர் : சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிப்பதை தவிர்க்கலாம். அதிலும் ஒரு சிலர் தினமும் குடிக்கும் பழக்கம் வைத்து இருப்பார்கள் அது நாளடைவில் சிறுநீரகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும்.
பாஸ்தா : பாஸ்தாவில் அதிக கார்போ ஹைட்ரேட் இருப்பதால், ரத்த சர்க்கரையின் அளவை அதிகரித்து. மூளையின் செயல் பாட்டை குறைக்க உதவுகிறது.
ஐஸ்கீரிம் : ஐஸ்கீரீமில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால்.., ரத்ததில் சுரக்கும் ரத்த இன்சுலின் செயல்பாட்டை குறைக்க செய்துவிடும்.
பதப்படுத்த பட்ட பொருட்கள் : பதப்படுத்தப்பட்ட பொருட்களான சிக்கன், மீன் மற்றும் போன்றவற்றை.., ஃப்ரெஷாக சமைத்து சாப்பிட்டால் பாதிப்பு இல்லை.., நீண்ட நாட்கள் பதப்படுத்தப்பட்ட பொருட்களை சாப்பிட்டால், பாதிப்பு ஏற்படுத்தும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..