உலகின் மிக பெரிய பணக்காரனாரான எலன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துத்து வருகிறார். அதில் பணிநீக்கம் மிகமுக்கியமானதாக பார்க்கபடுகிறது. இந்நிலையில் உலகில் பிரபல நிறுவனமான அமேசான் நிறுவனமும் ஆள்குறைப்பில் இறங்கியுள்ளது.
இது குறித்தான தகவலில், அமேசான் நிருவனத்திற்கு லாபமளிக்காத பிரிவுகளில் வேலை செய்யும் பணியாளர்களை நீக்குவதாக அறிவித்துள்ளது. அமேசான் கடந்த சில நாட்களாக ஆட்களை புதிதாக பணியமர்த்துவதை நிறுத்தியிருந்த நிலையில் தற்போது பணிநீக்கத்தை கையில் எடுத்துள்ளது.முதற்கட்டடமாக ரோபோடிக்ஸ் பிரிவில் இருந்த 3000 பேரை பணியிலிருந்து நீக்கியுள்ளது, மேலும் லாபம் ஈட்டாத பிரிவுகளில் ஆட்களை குறைக்கவும் முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி கூறுகையில், நாங்கள் தற்போது அசாதாரண ஒரு பொருளாதார
சிக்கலை சந்தித்து வருகிறோம் எங்களின் சூழலை கருத்தில் கொண்டு பணிநியமனம் மற்றும் முதலீடுகளை செய்ய உள்ளோம் மேலும் பணி நீக்கம் பெற்றவர்கள் வேறு வேலையே தேடிக்கொள்ளமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.