மின்னல் வேகத்தில் எடையை குறைக்க இதை ஃபால்லோ பண்ணுங்க..!!
உடல் எடையை குறைக்க விருப்பம் உள்ளவர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு கலர்ல இருக்கும் இறைச்சியை தவிர்க்க வேண்டும்.
இன்றைய காலக்கட்டத்தில் உடல் எடை அதிகமாக காணப்படுவது பொதுவான ஒன்றாகி விட்டது.
அதிகமான உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடை குறையவில்லை என கவலைப்படுவதற்கு காரணம், நீங்கள் உணவு பழக்கத்தை தவறாக கடைபிடிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இதற்கு சில முக்கியமான வெள்ளை உணவுகளை உங்கள் உணவு பட்டியலில் இருந்து முழுவதுமாக அகற்றினால் , உடல் எடை சீக்கிரமாக குறையும்.
மைதா கார்போஹைட்ரேட் அதிகம் கொண்டது. மைதாவால் செய்யப்பட்ட உணவுகளான பரோட்டா , சப்பாத்தி என மைதாவால் செய்யப்பட்ட அனைத்துமே கலோரிகள் அதிகம் இருக்கிறது,ஆகவே மைதா உணவுகளை முற்றிலும் அகற்றுவது மிக முக்கியம்.
சர்க்கரையில் அதிக கலோரிகள் இருப்பதால் எடை குறைக்க விருப்புவர்கள் சர்க்கரையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.இதற்கு பதிலாக வெல்லம் சேர்த்து கொள்ளலாம்.
உடல் பருமன் சீராக வைப்பதற்கான உணவு பட்டியல்:
அன்றாடம் காலை டீ , காபி , பால் போன்றவை குடிக்காமல் தவிர்க்க வேண்டும்.
காலை உணவிற்கு காய்கறி சாலட் எடுத்து கொள்ளலாம்.
மதியம் சிறிது சாப்பாடு, அதிக காய்கறிகளை சேர்த்து கொள்ள வேண்டும்.
இரவு உணவிற்கு ஒரு சப்பாத்தி மட்டும் சாப்பிட வேண்டும்.மேலும் பசி இருப்பது போல் தோன்றினால் பழம் சாப்பிடலாம்.
காலை உணவிற்கு 2 கோதுமை தோசை,அரை கப் தயிர் சேர்த்து சாப்பிடலாம்.
மதியம் பருப்பு,சப்பாத்தி மற்றும் காய்கறி ஒரு கப் எடித்து கொள்ளலாம்.
இரவு உணவிற்கு இரண்டு சப்பாத்தி மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
காலை உணவிற்கு ஒரு கப் பழம் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மதியம் ஒரு கப் காய்கறிகளுடன் பன்னீர் சாப்பிடலாம்.
இரவு உணவாக இரண்டு சப்பாத்தி சாப்பிடலாம்.
காலை உணவாக இரண்டு வேக வைத்த முட்டை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மதியத்திற்கு ஒரு கப் காய்கறி மட்டும் சாப்பிடவும்.
இரவு உணவிற்கு அரை கப் சாதம் எடுத்துக்கொள்ளலாம்.
காலை உணவாக காய்கறி உள்ள உப்புமா , மதியத்திற்கு பன்னீர் சேர்க்கப்பட்ட சப்பாத்தி மற்றும் இரவிற்கு ஒரு சப்பாத்தி வீதம் எடுத்துக்கொள்ளலாம்.
Discussion about this post