234 தொகுதிகளில் 188 டூவீலரா..? உதயநிதியின் மாஸ்டர் ப்ளான்..? களத்தில் அன்பில் மகேஷ்..!! பரபரப்பில் திமுக.!!
திமுக இளைஞ்ர் அணியின் மாநில மாநாட்டிற்கான இருசக்கர வாகன பிரச்சார பேரணியை நவம்பர் 15ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி வைக்க இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
188 இரு சக்கரவாகனங்கள் பயணிக்கும் இளைஞர்கள் 234 தொகுதிகளுக்கும் சென்று திமுக இளைஞர் அணி மாநாடு குறித்து பிரச்சாரத்தை நடத்தும் வகையில் ஒரு மாஸ்டர் பிளான் போட்டுள்ளார்.., உதயநிதியின் பிளான்களை எக்ஸிகியூட் செய்யும் விதமாக அமைச்சர் அன்பில் மகேஷ் செயல்பட்டு வருகிறார். அதற்காக கன்னியாகுமரி சென்று இருக்கும் அமைச்சர் இன்று காலை முதல் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்..
அன்பில் மகேஷ் :
இதுகுறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து தனது யாத்திரையை முதல் முறையாக தொடங்கினார்.., அது தேசிய அளவில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது.., அதே போல இந்த பிரச்சாரமும் பெரும் மாற்றத்தை கொண்டு வருமென அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்..
Discussion about this post