தூத்துக்குடியில் பறக்கும் கொடி..!! ஓங்காரமாக ஒலித்த அரோகரா கோஷம்..!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்படும்.
அந்தவகையில் இந்தாண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை நடந்ததை தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், அதனை தொடர்ந்து அரோஹரா கோஷங்கள் முழங்க கொடியேற்றி மகா தீபாராதனையும் நடந்தது.
இதில் கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் சிகரமான தேரோட்டம் வரும் 23ம் தேதி சனிக்கிழமை நடக்கிறது. வருகிற 25ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..