சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த ஐந்து பேர் கைது..!! பரபரப்பில் வேலூர்..!
பரமத்தி வேலூரில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை காலை மற்றும் இரவு நேரங்களில் விற்பனை செய்ததாக ஐந்து பேர்களை திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு போலீசார் மற்றும் பரமத்தி வேலூர் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 50 மதுபாட்டில்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி வேலூர் பகுதியில் காலை மற்றும் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய தம்பி, பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் நேற்று காலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் சட்டவிரோதமாக வேலூர் நான்கு ரோடு,சந்தை பகுதி, செல்லாண்டியம்மன் கோவில் மற்றும் பாலப்பட்டி அருகே உள்ள செங்கப்பள்ளி ஆகிய இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வேலூர் கிழக்குதெரு, தேர்வீதியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட மாணவர் அணிசெயலாளர் பாலகிருஷ்ணன் (39), வேலூர் கந்த நகரை சேர்ந்த மோகன் (65) டிரைவர், பரமத்தி வேலூர் அருகே உள்ள வீரணம்பாளையம், தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (48) விவசாயி மற்றும் பாலப்பட்டி அருகே உள்ள செங்கப்பள்ளியை சேர்ந்த பாரத் (29) ஆகிய நான்கு பேர்களையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 50 மது பாட்டில்களையும், ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு ஸ்கூட்டர் மற்றும் ஒரு மொபெட் உள்ளிட்ட மூன்று வாகனங்களையும் பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
Discussion about this post