இந்திய பம்ஸ் வெளியிட்ட புதிய திட்டம்..!! இந்தியா முழுவதும் அடுத்த வருடத்திற்குள்..?
இந்திய பம்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கத்தின், 72 ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் உணவக அரங்கில் இன்று நடைபெற்றது
இந்திய பம்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கத்தின், 72 ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் உணவக அரங்கில் இன்று நடைபெற்றது, அதில் அக்வா குழுமங்களின் தலைவர் குமரவேல் தலைமை தாங்கினார், நாடு முழுவதும் இருந்து வந்த பம்பு உற்பத்தியாளர்களால், கோவை டெக்கான் இண்டஸ்ட்ரீஸ் மேலாண்மை இயக்குனர் கார்த்திக் இந்திய பம்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு அனைத்து பம்ப் உற்பத்தியாளர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர், இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கார்த்திக் கூறியதாவது,…
இன்று நடைபெற்ற இந்திய பம்ப்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 72வது சர்வ தேச மாநாட்டின் வாயிலாக தன்னை தேர்ந்தெடுத்ததற்க்கு நன்றி எனவும், இந்த மாநாட்டின் வாயிலாக முடிவுகள் எடுக்கபட்டது ஏனென்றால் இந்திய உற்பத்திகளை நாடுமுழுவதும், கொண்டு செல்ல வேண்டும்.
இந்திய தயாரிப்பு பம்புகள் உலகளவில் முண்ணனி நாடாக திகழ செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இதற்கான பணிகள் என்னன்ன என்று இன்று காலை முதல் பல்வேறு கலந்தாய்வு நடத்தபட்டது.
விவசாயம் வீட்டு உபயோக பம்புகளை உற்பத்தி செய்து இந்திய நாட்டை தலை சிறத்த பம்பு உற்பத்தி நாடாக கொண்டு செல்ல தேவையான அனைத்து பணிகளையும் முன்னேடுக்க உள்ளதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post