சத்தான பாசிப்பயிறு சாலட்..!
பாசிப்பருப்பு முக்கால் கப்
எண்ணெய்
கறிவேப்பிலை சிறிது
பச்சை மிளகாய் 1
பெருங்காயத்தூள் அரை ஸ்பூன்
கடுகு அரை ஸ்பூன்
முதலில் பாசிப்பருப்பை சுத்தம் செய்து அதனை ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,பெருங்காயத்தூள்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அதில் பாசிப்பருப்பை நீர் வடிகட்டி சேர்க்க வேண்டும்.
பின் அத்துடன் கொத்தமல்லி இலை,அரைத்த தேங்காய்,உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
அனைத்தையும் நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் சத்தான பாசிப்பயிறு சாலட் தயார்.