கடந்த தீபாவளி அன்று கார்த்தி நடித்து வெளியான சர்தார் திரைபடம் வெளியானது. இந்த படம் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் உடல் நல சார்ந்த பிரச்சனைகளை பற்றி மிக அற்புதமாகவும் ஒரு திரைப்படத்திற்கு தேவையான சுவாரஸ்ய காட்சிகளையும் அமைத்து மிக பெரிய வெற்றி பெற்றது.
https://twitter.com/rameshlaus/status/1600319856511160320
கார்த்தி நடித்து இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சர்தார் 100 கோடி ரூபாய் வரை வசூல் வேட்டை செய்தது. இப்படத்தில் சர்வதேச அளவில் தண்ணீரை வைத்து நடக்கும் அரசியலை விறுவிறுப்பான திரைக்கதையுடன் ரசிகர்களுக்கு விருந்தளித்தனர். உளவாளியாக நடித்திருக்கும் கார்த்தி அசத்தலான நடிப்பை வெளிக்காட்டிருப்பார். மேலும், சர்தாருடன் வெளியான சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றதால் கார்த்தியின் சர்தார் திரைப்படத்திற்கு கூடுதலாக வரவேற்பு கிடைத்தது. இதனால் சர்தார் திரைப்படம் பெரும் வெற்றியை பதிவு செய்தது.
இதனை தொடர்ந்து, அந்த வெற்றியை கொண்டாடும் வகையில் சர்தார் திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பரிசு ஒன்றை அளித்துள்ளது. 30,000 ரூபாய் மதிப்புள்ள வெள்ளி வாட்டர் பாட்டிலை நடிகர் கார்த்தி வழங்கியுள்ளார். இந்த செயலால் கார்த்தி ரசிகர்கள் அவரை சமூக வளைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.