ADVERTISEMENT
விவசாயிகள் போராட்டத்தை தடுக்கும் வகையில் மார்ச் 12 ஆம் தேதி வரை டெல்லியில் 144 தடை உத்தரவு
விவசாயிகள் போராட்டத்தை தடுக்கும் வகையில் மார்ச் 12 ஆம் தேதி வரை டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விவசாய விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாய விலையை உறுதியை செய்வதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பேரணி நடத்த இருப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்தன.
இதனால் டெல்லி மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு தடுப்புகள் கொண்டு எல்லைகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.
பேரணி நடைபெறும் நிலையில், அடுத்த மாதம் 12- ஆம் தேதி வரை பொது இடங்களில் அதிகமானோர் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி நகருக்குள் துப்பாக்கிகள், எரியக் கூடிய பொருட்கள், செங்கல், கற்கள், பெட்ரோல் கேன்கள் அல்லது சோடா பாட்டில் ஆகியவை கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
டிராக்டர்கள் டெல்லிக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.