தனுஷிற்கு இரண்டாவது திருமணம்..! கஸ்தூரி ராஜா பார்த்த அந்த பெண்..?
பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் கடந்த 2004-ம் ஆண்டு, ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்து, கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதுபற்றி பல விதமான விமர்சனங்கள் எழுந்தலாலும் இவர்கள் இரு வீட்டாரும்., சேர்ந்து வாழ அறிவுறுத்தியும். இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததால் விவாகரத்து கோரி, ஏப்ரல் மாதம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற எங்களது திருமணத்தை செல்லாது என அறிவிக்கும் படி கோரிக்கை விடுத்திருந்தனர். பின் அந்த மனு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எஸ்.சுபாதேவி முன் விசாரணைக்கு வந்தது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி, நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அக்டோபர் மாதம் 7-ம் தேதி நேரில் ஆஜராகும் படி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா, சேர்ந்து வாழும் படி அறிவுறுத்தியுள்ளார். ஆனால் தனுஷ் விவாகரத்து கொடுப்பதில் உறுதியாக இருப்பதால், பேரன்கள் மற்றும் மகனின் வாழ்க்கையை நினைவில் கொண்டு தனுஷூக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அதற்காக சொந்தத்தில் பெண் தேடி வருவதாகவும், அதில் ஒரு பெண்ணை குடும்பத்தினர் பார்த்து விட்டதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.
– லோகேஸ்வரி.வெ