“தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்வதிலேயே தவறு” தேர்வு எப்படி சரியாக நடக்கும்..? அன்புமணி இராமதாஸ் கேள்வி..!
முதுநிலை நீட் தேர்வுக்கான தருமபுரி மாணவிக்கு ஜம்மு காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இது குளறுபடிகள் நிறைந்த நீட் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு ஆகும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா முழுவதும் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தருமபுரியைச் சேர்ந்த மாணவிக்கு ஜம்மு – காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகவும் அந்த மாணவி தருமபுரியிலிருந்து சென்னை வந்து விமானம் மூலம் காஷ்மீர் புறப்பட்டு சென்றிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாகவும் இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாணவிக்கு வடகோடியில் தேர்வு மையம் ஒதுக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார்..
அதை பல முறை சுட்டிக்காட்டியும் கூட தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்வதில் ஏற்படும் தவறுகளை கூட சரி செய்ய முடியாத தேசிய தேர்வு வாரியம், எப்படி முதுநிலை நீட் தேர்வை சரியாக நடத்தும்..? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இளநிலை நீட் தேர்வாக இருந்தாலும், முதுநிலை நீட் தேர்வாக இருந்தாலும் வினாத்தாள் கசிவு, தேர்வு மைய ஒதுக்கீட்டில் குழப்பம், தேர்வுகளில் முறைகேடு என பல புகார்கள் தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருப்பதாகவும் அதனால், நீட் தேர்வின் மீதான நம்பகத்தன்மை குறைந்து விட்ட நிலையில் அத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..