இரண்டு மகள்களை பாலியல் வன்கொடுமை செய்து கர்பமாக்கிய தந்தை ..!! ஆந்திராவில் நடந்த கொடூரம்..!!
ஆந்திரா மாநிலம் ஏழூர் மாவட்டம் வட்லூரை சேர்ந்த பத்மா ( பெயர் மாற்றம் ) 30 வயது பெண்ணுக்கு 2 மகள்கள் இருந்துள்ளனர்.., இந்த பெண்ணின் கணவர் 2007ம் ஆண்டு உடல் நல குறைவால் காலமாகியுள்ளார்.., கணவர் இறந்து விட்டதால் சதிஷ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
முதல் கணவருக்கு பிறந்த இரண்டு மகள்களுடன் ஒன்றாக இரண்டாவது கணவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.., இந்நிலையில் எனக்கென்று மற்றொரு வாரிசு வேண்டும் என கேட்டு சதிஷ் தகராறு செய்து வந்துள்ளார். அதற்கு பத்மா , நான் குடும்ப கட்டுப்பாடு செய்து விட்டேன் என்னால் இனி முடியாது என்று சொல்லியுள்ளார்.
அதற்கு சதிஷ் எனக்கு குழந்தை வேண்டும்.., இல்லையென்றால் நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்வேன் என கூறி இருக்கிறார்.., இந்த வாழ்க்கையும் பறிபோகிவிடுமோ என்ற பயத்தில்.., பத்மா நீ வேறு ஒரு பெண்ணையெல்லாம் திருமணம் செய்துக்கொள்ள வேண்டாம்.., என் மூத்த மகளை திருமணம் செய்துக்கொள்ள என கூறியிருக்கிறார்.
மகளையே எப்படி திருமணம் செய்துக்கொள்வது என்று எதுவும் கேள்வி கேட்காமல்.., சதிஷ் உடனே சம்மதித்துள்ளார்.., இதனால் ஆந்திராவில் 8 ம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் மூத்த மகள் அதற்கு மறுப்பு தெரிவித்தும் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் அந்த சிறுமியின் கர்ப்பமாகி இருக்கிறார்.., சில மாதங்களுக்கு பிறகு அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.., பெண் குழந்தை பிறந்ததும் எனக்கு ஆண் குழந்தை தான் வேண்டும் என தகராறு செய்துள்ளார்.., இதனால் பத்மா இரண்டாவது மகளையும் அந்த சதீஷிடம் ஒப்படைத்துள்ளார்.., இரண்டாவது மகளையும் கர்ண கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
இரண்டாவது மகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.., அந்த குழந்தை என்னை போலவே இல்லை என சொல்லி கால்வாயில் தூக்கி வீசியுள்ளான்.., இதில் ஆத்திரமடைந்த பத்மா வட்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்..
புகாரின் பெயரில் 18 வயது நிரம்பாத பெண்களை திருமணம் செய்து கர்பமாகிய குற்றத்திர்காக.. கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.