13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 70 வயது முதியவர்..!!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்திருக்கும் செங்காடு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் வயது 70.., இவர் அதே பகுதியில் இருக்கும் 13 வயது மனநலம் குன்றிய சிறுமியிடம் விளையாட சொல்லி தருவதாக கூறி தனியே அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அந்த அப்பாவி சிறுமிக்கு தந்தை கிடையாது.., தாய் மட்டுமே. தாய் கூலி வேலைக்காக தினமும் சென்று விடுவாராம். சிறுமி மட்டும் வீட்டில் தனியே இருந்து வந்துள்ளார்.., இதனை அறிந்த அந்த முதியவர் சிறுமியிடம் தினமும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் சிறுமியின் உடல் மிகவும் மோசமாகியுள்ளது.., இதனால் சிறுமியின் தாய் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது சிறுமி கர்ப்பம் என தெரியவந்தது.., இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் அருகிலுள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பெயரில் விசாரணை செய்த மகளிர் காவலர்கள் 70 வயது முதியவர் முனியாண்டி என தெரியவந்தது. எனவே அவரை கைது செய்ய திட்டமிட்டனர். இதை பற்றி முன்னறே அறிந்து கொண்டா முனியாண்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.