பாலியல் குற்றங்களுக்கு விரைவு நீதிமன்றம்… மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம்..!
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அந்த குற்றத்தை செய்தவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பது முக்கியம்.
ஆனால் இதுதொடர்பான வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்கு பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. எனவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிப்பதற்கு விரைவு நீதிமன்றங்கள் உருவாக்க படவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே உள்ளது.
இந்தநிலையில் இந்த கோரிக்கையை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் முன்மொழிந்துள்ளார். அதாவது பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 90 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடப்பதாக தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த போக்கு அச்சமடைய வைக்கிறது. எனவே குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படவேண்டும். அவ்வாறு தண்டனைகள் விதிக்கப்படவில்லை என்றால் குற்றவாளிகளுக்கு பாடம் புகட்ட முடியாது. இதன் முதற்கட்டமாக பாலியல் குற்றவாளிகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
-பவானி கார்த்திக்