காவேரி வேளாண் மண்டலத்தில் பல்நோக்கு விவசாயம்!!
மயிலாடுதுறையில் கடும் வறட்சி, கனமழை ஆகிய எந்த பருவத்திலும் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்வது குறித்த பயிலரங்கம் நடைபெற்றது.
மயிலாடுதுறையில் கடும் வறட்சி காலங்களிலும், கன மழை காலங்களிலும் அதிக பாதிப்பு ஏற்படாமல் விவசாயிகளுக்கு சமநிலையை ஏற்படுத்தும் விதமாக “காவேரி வேளாண் மண்டலத்தில் பல்நோக்கு விவசாயம்” என்ற தலைப்பில், நடைபெற்ற பயிலரங்கத்தில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
வேளாண் நெல் பண்ணைகளில் நெல் மட்டும் பயிரிடாமல், கன மழையை தாங்கி நிற்கும் பயிர் வகைகள், வறட்சியை தாங்கி வளரும் பயிர் வகைகளை பயிரிடுவதன் மூலம் எந்த பருவநிலையிலும் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படாது என இந்த பயிலரங்கில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.