கொடைக்கானலில் மலைப்பூண்டின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது!!!
கொடைக்கானலில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புதிய உச்சத்தை தொட்டிருக்கும் பூண்டு விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொடைக்கானல் மலை காய்கறிகளான கேரட், முள்ளங்கி , பீன்ஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் சந்தைகளில் அதிகம் இடம் பிடித்து வருகின்றன .
இதில் புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்து வருகின்றது.
கடந்த மூன்று ஆண்டுகளாக பூண்டு விற்பனை 300 ரூபாய் வரை மட்டுமே அதிகமாக விற்பனையாகி வந்தது.
தற்போது மலைப்பூண்டின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. விவசாயிகள் விற்பனை செய்யும் பொழுது ஒரு கிலோ 400 ரூபாய் முதல் 450 வரை
விற்பனையாகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Discussion about this post