சிக்கிய போதை பொருள் கடத்தல் ஆசாமிகள்..!!
சென்னையில் அதிகமாக போதை பொருள் உபயோகிப்பதாகவும்.., அதை பலரும் விற்பனை செய்வதாகவும் போதை பொருள் தடுப்பு சட்ட பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது, அதன் பெயரில் கடந்த சில தினங்களாக ரோந்து பணி போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போதை பொருள் விற்பனை செய்ததன் பெயரில் 25 பேரை கைது செய்துள்ளனர். 15, 35 கிலோ கஞ்சா, ஒரு கிலோ கஞ்சா சாக்லேட்டுகள், 34 கிராம் மெத்தாம் பெட்டைமைன், 120 போதை மாத்திரைகள், இதுவரை பறிமுதல் செய்துள்ளனர்.
போதை பொருள் கொண்டு வந்தவர்களிடம் இருந்து 5 செல்போன்கள், கார், 8,930 ரூபாய் பணம் பறிமுதல் செய்யபட்டுள்ளன, போதை பொருள் கடத்தியவர்களை, போதை பொருட்கள் கடத்தல் பிரிவு மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் 49 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் இந்த கஞ்சா எப்படி கிடைத்தது.., இதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார் என போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Discussion about this post