பிரபல ரவுடி பாலாஜி என் கவுண்டரில் கொலை..!! பரபரப்பான வியாசார்பாடி..!!
சென்னை பேசன்பிரிட்ஜ் அடுத்த புளியந்தோப்பின் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில், குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து அந்த பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட வந்தனர்.. ரவுடிகளை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் அறிவுறுத்தலின் பேரில் போலீசார்., இரவில் வாகன தனியாகையில் ஈடுபடுவது குற்றங்கள் மற்றும் விபத்துக்கள் நடக்காமல் பார்த்து கொண்டனர்..
கடந்த மாதம் ஆகஸ்ட் 23ம தேதி மதுரையில் அலங்காநல்லூர் போலீஸ் சரகம், நாகமலை புதுக்கோட்டை போலீஸ் நிலைய சரகம் போன்ற முக்கிய போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், துப்பாக்கி ஏந்திய போலீசார் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று சட்ட விரோத செயல்கள் பற்றியும், சமூக விரோதிகளின் நடமாட்டம் பற்றியும் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 70 நாட்களில் மதுரை மாநகரில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 126 ரவுடிகளை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் 30 வயதிற்கு கீழுள்ள இளைஞர்கள் 100 பேரும், 30 வயதுக்கு மேற்பட்ட 16 பேரும் அடங்குவர்.
இதுகுறித்து மதுரை காவல் ஆணையர் லோகநாதன் ஐபிஎஸ் அதிகாரி அவர்களை நம் மதிமுகம் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறியதாவது.., “சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மதுரையை போதையில்லா மாநகரமாக மாற்றி பொதுமக்களுக்கு இடையூறு விளைவீப்பவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என அவர் கூறினார்.
இந்நிலையில் இன்று அதிகாலை வியாசர்பாடி ஜீவா இரயில் நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்த ரவுடி பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். காக்காதோப்பு பாலாஜி மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.. மற்றும் ரவுடி பாலாஜி போலீசில் இருந்து தப்பும் போது என்கவுண்டர் செய்யபட்டாரா அல்லது காவலர்கள் பிளானா..? என்பது பற்றிய அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..