ஜமால் என்பவர் சென்னையில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அப்போது என்ஐஏ அதிகாரிகள் என்று கூறி 20 லட்சத்தை திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் திடீரெனெ அந்த கோலியர்கள் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
சென்னையிலுள்ள பர்மா பஜாரில் ஜமால் செல்போன் விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி என்ஐஏ அதிகாரிகள் என்று கூறி கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக கடையை சோதனை செய்துள்ளனர் . சோதனையின் போது கடையிலுருந்த 20 லட்சத்தை எடுத்து சென்றுள்ளனர். இதையடுத்து ஜமால் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி அவர்களை தேடி வந்தபோது அவர்கள் போலி என்ஐஏ அதிகாரிகள் என்றும் அவ்வாறு கூறி பணத்தை திருடியுள்ளார்கள் என்றும் தெரிய வந்தது. மேலும் திருட்டில் ஈடுபட்ட அந்த கொள்ளையர்கள் பாஜக நிர்வாகி வேலு உள்ளிட்ட 6 பேர் என்று விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் அந்த போலி என்ஐஏ அதிகாரிகளான கொள்ளையர்கள் திடீரென ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தாமாக சரணடைந்தனர். சரணடைந்த பின் அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தில் 20 லட்சம் மட்டுமின்றி இதுவரை 2 கோடி வரை கொள்ளையடித்து உள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்களின் இந்த வாக்கு மூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.