குடும்ப தகராறு.. ஆத்திரம் தீராத கணவர்… இறுதியில் நடந்த விபரீதம்..!
கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அருகே பெலவர்த்தி பக்கமுள்ள காட்டூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராமமூர்த்தி (72). இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட ராமமூர்த்தி கடந்த சில ஆண்டுகளாகவே சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று காலை பிள்ளைகளுக்கு நிலத்தை பிரித்து கொடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது மனைவி லட்சுமியுடன் ராமமூர்த்தி தகராறில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரத்தில், அருகில் கிடந்த கட்டையால் மனைவியை ஆவேசமாக தாக்கினார்.
அதன் பின்னரும் ஆத்திரம் அடங்காத ராமமூர்த்தி அங்கிருந்த கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த லட்சுமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் லட்சுமியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை தீவீர சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் லட்சுமி உயிரிழந்தார்.
இதுகுறித்து மகாராஜகடை போலீசார்க்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து ராமமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்