மூளையை தின்னும் அமீபா பாதிப்பு..! இதுவரை உயிரிழப்பு…!
கொரோனா பாதிப்பு அலைகள் ஓய்ந்ததை தொடர்ந்து அதன் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்துள்ளது. இந்நிலையில் அமீபிக் மூளை காய்ச்சல் என்னும் நோய் பரவல் தொடங்கியுள்ளது. இந்த நோயால் சமீபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் அமீபிக் மூளைக் காய்ச்சல் எனப்படும் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் (Amoebic Meningo-Encephalitis PAM) பாதிப்பினால் உயிரிழந்தார்.
அதேபோல், மேலும் 2 சிறுவர்கள் கேரள மாநிலத்தில் இந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் மூளையை தின்னும் அமீபாவுக்கு 3 பேர் உயிரிழந்த நிலையில் அமீபா பாதிப்பு குறித்து வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் அவர் கூறப்பட்டிருப்பதாவது,
தேங்கி இருக்கும் நீரில் குளிப்பதைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும்.
நீர்நிலைகள், குளங்கள், ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும்.
அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் மூளையைத் தின்னும் நோய்த் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கும், அறிகுறிகளின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய பாதிப்புகள் உள்ளவர்களை கண்டறிய ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.
மேலும், சந்தேகத்திற்குரிய பாதிப்புகள் உள்ளவர்களை உடனடியாக மூன்றாம் நிலை பராமரிப்பு மையங்களுக்கு பரிந்துரைக்க வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..