சமீப காலமாக இந்தியா மற்றும் சீனாவின் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் பாஜக வை கடுமையாக விமர்சித்து வருகின்ற நிலையில் பாஜக அரசு அதை பற்றி பேச தயக்கம் காட்டி வருவதாக அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
மாநிலங்களவையில் கடந்த 9ம் தேதி அன்று இந்தியா மற்றும் சீன பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டதாக ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். இந்தியாவின் சில குறிப்பிட்ட பகுதிகளை சீன ராணுவம் அத்துமீறி அபகரித்து வருவதால் இந்திய மற்றும் சீன படையினரிடையே மோதல் ஏற்பட்டதாக மாநிலங்களவையில் கூறினார். அதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கடுமையாக இதனை விமர்சித்து வந்தனர். இந்நிலையில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் இருக்கும் ராகுல் காந்தி கடந்த வாரம் ஒரு பேட்டியில், “சீனா பெரிய போருக்கு தயாராகி வருகிறது. ஆனால், இந்திய அரசோ தூங்கிக் கொண்டிருக்கிறது” என்று கூறினார் இந்த கருத்தால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு பாஜக வினர் ராகுல் காந்தி நாட்டை அவமானப்படுத்தி வருகிறார் என்று இந்தியாவை உடைக்க பார்க்கிறார் என்று கூறினார்கள். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடா நடைப்பயணத்தில் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார் அப்போது அவர் பேசுகையில், ராகுல் காந்தி கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் ராகுல் காந்தியை விமர்சித்து இந்த விவகாரத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் என்று பேசியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், பாஜக அரசை கூர்ந்து கவனித்தால் மக்கள் மத்தியில் பேசும்போது சிங்கம் போன்று பேசுவார்கள் ஆனால் செயற்பாட்டில் எலி போன்று இருப்பார்கள் இப்போது கூட இந்தியா சீனா எல்லை பிரச்னையிலும் அப்படித்தான் இருக்கிறார்கள் சீனாவை பற்றி பேசினாலே மோடி மாற்று அவரின் அரசு ஓடி ஒளிந்து கொள்கிறது என்று என்று விமர்சித்துள்ளார். மேலும், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் நமது 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஆனால், அதற்கு பிறகும் 18 முறை சீன அதிபரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அதுமட்டுமல்ல அவருடன் சேர்ந்து ஊஞ்சல் கூட ஆடினார். இருந்தபோதிலும், எல்லைப்பகுதியில் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இதுபற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்க கூடாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், சுதந்திர புறத்தில் எத்தனையோ காங்கிரஸ் கட்சியினர் தனது உயிர்களை தியாகம் சித்து நம் நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தந்தனர்.ஆனால் பாஜகவில் அவர்களின் நாய் கூட சுதந்திர போராட்டத்தில் சாகவில்லை என்று கடுமையாக பேசினார். மேலும், பாஜகவை சேர்ந்தவர்கள் தங்களை தாங்களே தேசபக்த்தர்கள் என்று பெருமை பேசிக்கொள்வார்கள் ஆனால் காங்கிரெஸ்ஸை தேச விரோதி என்று விமர்சிப்பார்கள் என்றும் பாஜக எவ்வளவு முயன்றாலும், அவர்கள் உண்மையான தேசபக்தர்களாக மாற முடியாது என்பது மக்களுக்கு தெரியும் பாஜக மற்றும் பிரதமரை காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். மேலும் நேற்று மாநிலங்களவையில் சீன இந்தியா எல்லை பிரச்சனை குறித்து விவாதிக்க அவை தலைவர் மறுத்தது குறிப்பிடத்தக்கது.