கண் பார்வை பிரச்சனையா..? அப்போ இந்த 6 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!!
ஒரு சிலருக்கு சிறு வயதில் இருந்தே கண் பார்வையில் பிரச்சனைகள் இருக்கும்.. இதனால் கண்கள் பாதிப்பிற்கு உள்ளாகிறது…
அப்படி கண்களை பாதுகாக்க அவசியம் பின்பற்ற வேண்டிய 6 வழிமுறைகளை வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்…
இதன் மூலம் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் என சொல்கிறார்கள்..
எப்படி பாதுகாக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..
வயது முதிர்வு நம் உடல்நலத்தை எப்படி பாதிக்குதோ அதேமாதிரி நம் கண் பார்வையையும் பாதிக்கும் . கண் பார்வை சீராக இருந்தால், முதுமையிலும் நாம் சுதந்திரமாக செயல்படலாம்.
இந்நிலையில், கண்களில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து மருத்துவர் நரேந்திர சிங் விவரித்துள்ளார்..
அருகில் இருக்கும் பொருள்களை தெளிவாக காண்பதில் சிக்கல் ஏற்படரது, பார்ப்பதில் தெளிவின்மை மற்றும் கண்ணாடி அணிந்து படிப்பதன் அவசியம் அதிகரிப்பது போன்றவற்றின் மூலம் கண்களில் பிரச்சனை ஏற்படுவதை கண்டறியலாம்” என மருத்துவர் நரேந்திர சிங் தெரிவித்திருக்கிறார்.
மேலும், கண்களை சுற்றிலும் சுருக்கம், குறைவான வெளிச்சத்தில் பார்ப்பதில் சிக்கல் போன்ற பிரச்சனைகள் முதுமையின் காரணமாக ஏற்படலாம்” என கூறியுள்ளார்.
இது போன்ற பல்வேறு கண் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க 6 வழிமுறைகளை பின்பற்றலாம்..
1. சன்கிளாஸ் அணிதல் :
சன்கிளாஸ் அணிவதன் மூலம் புறஊதாக் கதிர்களிடமிருந்து நீங்கள் கண்களை பாதுகாக்கலாம்.
2. மருந்துகள் பயன்படுத்துதல் :
கண்கள் ஈரப்பதம் இன்றி வறண்டு போவதை தவிர்க்க, மருத்துவரின் அறிவுறுத்தலின் படி, மருந்துகளை பயன்படுத்தலாம்.
3. ஆரோக்கியமான உணவு பழக்கம் :
வைட்டமின் ஏ, சி, இ, ஒமேகா, ஆன்டிஆக்சிடன்ஸ் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
4. தேவையான அளவு தண்ணீர் குடித்தல் :
உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடுப்பதால், உடல் மற்றும் கண் இரண்டுக்கும் நன்மை ஏற்படும். வறட்சி தன்மையை கட்டுப்படுத்தும் என்று சொல்லிகிறார்கள்
5. அதிக நேரம் கணினி மற்றும் செல்போன் பயன்படுத்துபவர்கள், ஒவ்வொரு 20 நிமிடமும் இடைவேளை எடுத்து கொள்ள வேண்டும். 20 அடி தூரம் தொலைவில் உள்ள ஏதாவது ஒரு பொருளை, 20 வினாடிகள் பார்க்க வேண்டும்.
6. கண் பரிசோதனைகள் மேற்கொள்ளுதல் :
சீரான இடைவெளியில் கண் மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் பாதிப்புகள் இருந்தால் அவற்றை விரைவில் அறிந்து கொள்ளலாம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..