தவெக செயற்குழு கூட்டம்..!! மகளிர்கான தீர்மானம் நிறைவேற்றம்..!!
சென்னை பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் இன்று.. தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தலைவர் திரு. விஜய் அவர்கள் தலைமையில், பொதுச் செயலாளர் திரு ஆனந்த் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது…
இக்கூட்டத்தில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..
தமிழக வெற்றிக் கழகத்தில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு கட்சிப் பதவிகள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு, பெண்களுக்கு ஒதுக்கப்படும். படிப்படியாக உயர்த்தப்பட்டு 50 விழுக்காடு என்ற நிலையும் எட்டப்படும்…
அனைத்துத் துறைகளிலும் ஆணுக்கு நிகராகப் பெண்களுக்குச் சம உரிமை அளிக்கப்படும். பெண்கள், குழந்தைகள், முதியோர் பாதுகாப்பிற்குத் தனித் துறை உருவாக்கப்படும்…
மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டது போல, மாவட்டந்தோறும் மகளிர்கான மாவட்டக் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் தனியாக அமைக்கப்படும்… என தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..