“ உலக அறிவியல் தினம் – நவம்பர் 10-ஆம் தேதி “
உலக அறிவியல் தினம் நவம்பர் 10 ஆம் தேதி அமைதி மற்றும் வளர்ச்சிக்கான நோக்கதில் கொண்டாடப்படுகிறது.
2001 ஆம் ஆண்டு ஐ.நா.வின் கல்வி , அறிவியல் , மற்றும் கலாச்சார அமைப்பினால் “ உலக அறிவியல் தினம் ” உருவாக்கப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் அறிவியலின் பயன்கள், முக்கியத்துவங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு கொண்டுவரவே இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக அறிவியல் தினம் நாடு முழுக்க அறிவியலுக்கான பல உறுதியான திட்டங்கள் மற்றும் நிதியுதவியை உருவாக்குகிறது. சண்டையினால் பாதிக்கப்பட்ட பகுதியில் வாழும் விஞ்ஞானிகளிடையே ஒத்துழைப்பை வளர்க்க இந்த நாள் உதவுகிறது.
சமூகத்தின் இடையில் அறிவியலின் முக்கிய பங்கை உலக அறிவியல் தினம் சுட்டிக்காட்டுகிறது. மேலும் மிகச்சிறந்த ஆய்வுகளில் உள்ள விஞ்ஞானிகளுக்கு யுனெஸ்கோ விருதுகள் வழங்கி உலக அறிவியல் தினத்தில் ஊக்குவிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் உலக அறிவியல் தினத்திற்காக ஒரு கருப்பொருள் அமைக்கப்படும் அதன்படி இந்த ஆண்டுக்கான கருப்பொருள் “அறிவியலில் நம்பிக்கையை வளர்ப்பது ” ஆகும்.
அறிவியல் கண்டுபிடிப்புகளில் அவநம்பிக்கை அதிகரித்து வருவதன் மத்தியில், ’அறிவியலில் நம்பிக்கை உருவாக்குதல்’ மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.