சாகும்போதும் காட்பாடி என்றே உச்சரிப்பேன் – துரைமுருகன் உருக்கம்..!
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பொன்னையாற்றின் குறுக்கே, 35 கோடி ரூபாய் மதிப்பில், உயர்மட்ட பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் திறப்பு விழா, அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், தன்னுடைய தொகுதி தான், தனக்கு கோவில் என்றும், உயிர் உள்ளவரை, தொகுதி மக்களுக்கு அடிமையாக இருப்பேன் என்றும், அவர் கூறினார்.
மேலும், தொகுதியின் பெயரை சொல்லிக் கொண்டே இருக்கும்போது தான், அவரது உயிர் பிரியும் என்றும் கூறினார். தொடர்ந்து, புதிததாக கட்டப்பட்ட பாலம் குறித்து பேசிய துரைமுருகன், இந்த பாலம் 100 ஆண்டுகளையும் கடந்து நிலைத்து நிற்கும் என்றும், இந்த பாலத்தால், துரைமுருகனை பிடிக்காதவர்கள் கூட, அவரை பற்றி போற்றுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”