முன் விரோதம்..! அண்ணன் தம்பி சரமாரியாக வெட்டி கொலை.. போலீசார் வலைவீச்சு…!
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, நாச்சிகுளம் பகுதியை சேர்ந்த ஆண்டிச்சாமி என்பவரின் மகன்கள் சுபாஷ், மற்றும் ஜெயசூர்யா. இவர்கள் மீது சோழவந்தான் காவல் நிலையத்தில் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இருவரும் சிவகங்கையில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று நள்ளிரவு காளையார்கோவில் அருகே உள்ள கொல்லங்குடி பகுதியில் உள்ள தைலமரக் காட்டுக்குள் நள்ளிரவு சுபாஷ், ஜெயசூர்யா அவர்களது 3 நண்பர்களுடன் பேசிகொண்டிருந்தனர்.
அப்போது மூன்று இரு சக்கர வாகனத்தில் வந்த எட்டு பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் அண்ணன் தம்பி சுபாஷ், ஜெயசூர்யா ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு மற்ற மூன்றுபேரை வெட்ட முற்படும் பொழுது அவர்கள் தப்பி ஓடி உள்ளனர்.
இதனைதொடர்ந்து,கொலை சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய ராஜேஷ், நவீன், ஆகியோர் காளையார்கோவில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வரைந்து சென்ற போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த இருவரும் அண்ணன், தம்பிகள் என்பதும் பல வருடங்களாக தொடர்ந்த முன் விரோத காரணமாக கொலை செய்ததும் தெரியவந்தது. கொலை செய்து விட்டு தப்பி சென்ற 7 பேரை போலீசார் திவீரமாக தேடி வருகின்றனர். மேலும் அண்ணன், தம்பி இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”