இந்திய நாட்டின் 140 கோடி மக்களையும் நவீன உளவுக் கருவிகள் மூலம் மோடி அரசு கண்காணிப்பதாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஃபைனான்சியல் டைம்ஸ் என்ற பத்திரிகை, மோடி அரசின் உளவு திட்டத்தை தெரியபடுத்தியுள்ளது. இஸ்ரேலை சேர்ந்த காக்னைட், செப்டியர் போன்ற நிறுவனங்களிடம் இருந்து அதிநவீன உளவுக் கருவிகளை மோடி அரசு வாங்கியுள்ளது
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன், சிங்கப்பூரின் சிங்டெல் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் கண்காணிக்கபட்டுகிறார்கள். செல்போன் பேச்சு, செல்போன் தகவல் பரிமாற்றம், ஈ-மெயில்கள் என அனைத்தையும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. பொதுமக்கள் இணையத்தில் என்ன பயன்படுத்துகிறார்கள் என்பதையும் செப்டியர் உளவு கருவி மூலம் கண்காணிக்கபடுகிறது. ஏற்கனவே இஸ்ரேலை சேர்ந்த பெகாசஸ் உளவு சாதனங்கள் மூலம் மோடி அரசு செய்தியாளர்களை கண்காணித்து தெரியவந்தது.