பொறியியல் தரவரிசை பட்டியல், கலந்தாய்வு தேதி வெளியீடு..!
பொறியியல் படிப்பிற்காக விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்க ஆணையர் வீரராகவராவ் வெளியிட்டு அதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 2,53,954 பேர் பதிவு செய்துள்ளனர்.
பதிவு கட்டணம் செலுத்தியவர்கள் 2 லட்சத்து 9,645 பேர்கள். இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டு விட 11.69% அதிகம். இந்த ஆண்டு ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 11.68% கூடுதலாக உள்ளது. 36,532 பேர் 7.5% பேர் பதிவு செய்திருந்தனர். 13.36 சதவீதம் சென்றாண்டை விட இந்த எண்ணிக்கை கூடுதலாக உள்ளது.
ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீட்டான 7.5% ஒதுக்கீட்டில் பதிவு செய்ய விடுபட்ட மாணவர்கள் ஜூலை 18-ஆம் தேதி வரை தங்கள் பெயரை இணைத்துக் கொள்ளலாம்.
இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 22 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டில் முன்னாள் ராணுவ வீரர்கள் விளையாட்டு துறை மாணவர்களுக்கும் .
அதனை அடுத்து ஜூலை 25 ஆம் தேதி 27 ஆம் தேதி வரை பொதுப் பட்டியலில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களின் மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கும்.
அதனைத் தொடர்ந்து 29 ஆம் தேதி முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை ஒரு லட்சத்து 7.5% இட ஒதுக்கீட்டு கலந்தாய்வும் 22ஆம் தேதி தொடங்க உள்ளது.
ஜூலை 15ஆம் தேதிக்குள் எவ்வளவு மொத்த இடங்கள் மொத்த கல்லூரிகள் என்ற தகவல்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்படும். என தொழில்நுட்ப கல்வி இயக்க ஆணையர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
– லோகேஸ்வரி.வெ