இஎம்ஐ வாழ்க்கை..!!
வாழ்க்கையில் எல்லாம் எளிதாக கிடைத்து விடுவதில்லை சின்ன வயதில்
காலில் செருப்பு இல்லாமல் லாட்ரி விற்றேன் வெயில் சுடும் செருப்புக்கு ஆசைப்பட்டேன் 12 வயதில் நானே சம்பாதித்து செருப்பு வாங்கினேன்…
திருமணம் ஆனதும் தலைச்சுமையாக ஜவுளி விற்க்க முடியவில்லை சைக்கிளுக்கு ஆசைப்பட்டேன் சைக்கிள் வாங்கினேன்.
சைக்கிளில் அதிக தூரம் வியாபாரத்துக்கு செல்ல முடியாது
என்பதால் மோட்டார் சைக்கிளுக்கு ஆசைப்படேன் TVS champ வாங்கினேன்.
தூர ஊர்களுக்கு செல்ல பவரான வண்டிக்கு ஆசைப்படேன் M80 வாங்கினேன் 17 வருடங்கள் போனது.
பிள்ளைகளின் கல்வி திருமணம் முடித்து நிம்மதி அடைந்தேன்.
எல்லோரும் போல் ஒரு கார் இருந்தால் நன்றாக இருக்கும் என ஆசைப்பட்டேன்.., 2017ல் புதிய பைக் வாங்கினேன்…
கொஞ்சம் சொகுசு கார் இருந்தால் நன்றாக இருக்கும் என ஆசைப்ட்டேன் இன்று ஹூண்டாய் எக்ஸ்டேர் வாங்கினேன்..
எனது உழைப்பு லோன் கட்டலாம் என்கிற நம்பிக்கை.. எதையும் அடையலாம் லட்சியம் இருந்தால்..
ஆசைபடு நியாமான ஆசையாக இருந்தால் இறைவன் நிறைவேற்றுவான் ..
ஏழையாக பிறந்தது எனது தவறு கிடையாது நாம் சாகும் பொழுது ஏழையாக சாகக்கூடாது .
உண்மையா உழைங்க நேர்மையா இருங்க எல்லாம் தேடிவரும்..
கொஞ்சம் கஸ்டபட்டால் நாம் இஸ்ட பட்டதை வாங்க முடியும்…
தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்…
ஆச்சரியமா இருக்கா..? தொடர்ந்து படிங்க…..
ஏன்னா சைக்கிள்ல போறவ கார் வாங்க மாட்டான்… பைக் வாங்க மாட்டான் அதற்காக கடன் வாங்கவும் மாட்டான்…
வட்டியும் கட்ட மாட்டான்…பேங்க் பைனான்ஸ் கம்பெனிக எதுக்கும் சல்லி பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லாதவ இவ ….
கார் இன்சூரன்ஸ் பண்றதுக்கு போக மாட்டான்…இந்த பெட்ரோல் டீசல்….. ம்ஹூம்… வாய்ப்பே இல்ல…
இவனால அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கும் கூட எந்த பயனும் இல்ல…
சர்வீஸ் ஸ்பேர் பார்ட்ஸ் எதற்கும் இவன் செலவு செய்யறது இல்ல…
பார்க்கிங் கட்டணம்னு பெருசா எங்கேயும் செலுத்த மாட்டான்…
இதெல்லாம் போய்த் தொலையட்டும்னு உட்டா…
இவனுக்கு சுகர் வராது… இதய நோய் வராது… குண்டாகவும் மாட்டான்…
ஆஸ்பத்திரி, டாக்டர் , மருந்து கடை இதெல்லாம் இவனுக்குத் தேவையே இல்லை…
உலக பொருளாதாரம் வளர இவன் எதுவும் செய்ய மாட்டான்…
அதே சமயம் ஒரே ஒரு பீட்ஸா கடை ஊர்ல உள்ள எல்லா டாக்டரையும் வாழ வைக்கும்…
10 இதய டாக்டர்…
10 பல் டாக்டர்…
10 டயட்டீசியன்…
இன்னும் ஒரு 50 மெடிக்கல் ஷாப்க்கு தேவையான பொருளாதாரம் அதனால கிடைக்கும்…
உடனே முடிவெடுங்க
சைக்கிளா..?
பைக்கா..?
காரா..?
இந்திய பொருளாதாரமா…?
உங்க உடல் நலமா…?
–வீரப்பெருமாள் வீர விநாயகம்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..