ட்விட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்தே ஏராளமான சர்ச்சைகளிலும், பிரச்சனைகளிலும் வாண்டடாக போய் மாட்டிக்கொண்டு வந்த எலான் மஸ்க், தற்போது அந்நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று எலோன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட்டருக்கு புதிய தலைமை நிர்வாகியைக் கண்டுபிடித்ததாகக் கூறினார், ஆனால் அந்த நபரின் பெயரைக் குறிப்பிடவில்லை, அதே நேரத்தில் காம்காஸ்ட் என்பிசி யுனிவர்சல் நிர்வாகி லிண்டா யாக்காரினோவை புதிய ட்விட்டர் சிஇஓவாக நியமிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மஸ்க் தனது ட்வீட்டில், “எக்ஸ்/ட்விட்டருக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவள் 6 வாரங்களில் பணியை தொடங்குவாள்!” என பதிவிட்டுள்ளார். இதன் மூலமாக ட்விட்டர் நிறுவனத்தின் அடுத்த சிஇஓ பெண் என்பது உறுதியாகியுள்ளது.