சென்னை கொடுங்கையூர் குப்பைகிடங்கில் இருந்து தயார் செய்யும் மின்சாரம் ..!!
சென்னை மாநகராட்சிக்கு தினமும் 52 லட்சம் கிலோ குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. அதில் 60 சதவிகிதம் குப்பையை மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. வருங்காலங்களில் 100 சதவிகித குப்பைகளையும், பிரித்து மறுசுழற்ச்சி செய்யும் முயற்சியில், மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அதில் 22 லட்சம் மட்கும் குப்பையில் இருந்து உரம் மற்றும் “பயோகாஸ்” தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த உரங்கள் விவசாய நிலங்களுக்கும் மாநகராட்சி பூங்காகளுக்கும். பயன்படுத்தப் படுகின்றன..
மட்காத குப்பைகளும் தரம் பிரிக்கப்பட்டு.., மறுசுழற்சியில் பயன் படுத்தி பிளாஸ்டிக் மற்றும் சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்த மட்காத குப்பையில் இருந்து பல்ப், பேட்டரி மற்றும் பெயிண்ட் எண்ணெய், எண்ணெய் கேன்கள் தயார் செய்யப்படுகின்றன.
காலாவதியான மருந்துகள் மணலியில் உள்ள ஆலைக்கு அனுப்பப்பட்டு பேவர் பிளாக் கற்களாக தயார் செய்யப்படுகின்றனர். எந்த விதத்திலும் பயன் படுத்தாத சில குப்பைகளை கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கிற்கு அனுப்பப்படுகின்றன .
அதில் இருக்கும் குப்பைகளை வைத்து மின்சாரம் தயார் செய்யும் பணியில்.., மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மறுசுழற்சிக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டு, மறுசுழற்ச்சி நிறுவனங்களுக்கு அனுப்பட்டு மின்சாரம் தயாரிக்க சில பணிகளை செய்துவருகிறது.
கொடுங்கையூரில் இருக்கும் குப்பை கிடங்கில், 350 கோடி ரூபாய் செலவில் மின் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளது. தினசரி 14லட்சம் குப்பையில் இருந்து, 15 மெகாவாட் மின்சாரம் தாயர் செய்யப்பட்டு வருகிறது.
Discussion about this post