ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாகவும், ஹரியானாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஹரியானா மாநிலம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் எனவும், செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
2-ஆவது கட்டமாக செப்டம்பர் 25-ஆம் தேதியும், மூன்றாவது கட்டமாக அக்டோபர் ஒன்றாம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் ராஜீவ் குமார் அறிவித்தார்.
இதே போல, ஹரியானா மாநிலத்தில் செப்டம்பர் 5-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் எனவும், ஒரே கட்டமாக அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவித்தார்.
இதையடுத்து, ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீரில் பதிவான வாக்குகள் அக்டோபர் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்தார்.
-பவானி கார்த்திக்