“அடுத்தவர் காலில் விழுந்து பதவிக்கு வந்த எடப்பாடி..” அண்ணாமலை மீது திரும்பிய அதிமுக கோபம்..!!
முத்துகடையில் அதிமுகவினர் பாஜக தலைவர் அண்ணாமலை உருவ பொம்மையை எரித்து ஆர்பாட்டம்
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று பாஜ பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மற்றும் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன், பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி, வி.பி.துரைசாமி உள்ளிட்ட பலர் அதில் பங்கேற்றனர்.. அப்போது கூட்டத்தில் பேசிய அண்ணாமலை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை தாக்கி பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது “ஊர்ந்து, தவழ்ந்து, அடுத்தவர் காலில் விழுந்து பதவிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி உங்களுக்கு என்னைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது., பதவிகளை விட்டு அரசியலுக்கு வந்தவருக்கு பதவிக்காக அரசியலில் வந்தவருக்கு மற்றவர்களை பற்றி பேச அருகதை கிடையாது என பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக பேசியுள்ளார்.
மாதம் மாதம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணத்தை கொடுத்து நாற்காலியை காப்பாற்றிய கொள்ளும் எடப்பாடி பழனி சாமி., என்னைப்பற்றி பேசக்கூடாது. பாஜவுக்கு 2026 அரிய வாய்ப்பு, இந்த வாய்ப்பை விட்டு விட்டால் அதுபோல வாய்ப்பு மீண்டும் கிடைக்காது என நன்றாக தெரியும்., அதனால் நீங்க இந்த வேலையெல்லாம் செய்யுறீங்கனும் தெரியும் என எடப்பாடி பழனிசாமியை தாக்கியே அண்ணாமலை நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்..
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக சார்பில் செல்லூர் ராஜு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உட்பட அமைச்சர்கள் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தனர்… இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக கட்சியினர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமை வகித்திருந்தார். மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது “அதிமுக கட்சியின் பொது செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே பழனிச்சாமி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசி வரும் செயலை கண்டித்தும் மேலும் தமிழக காவல்துறை அண்ணாமலையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி அண்ணாமலையின் புகைப்படத்தை கிழித்து தெரிந்தும் மற்றும் திருவுருவ பொம்மையை எரித்தும்” தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..