கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை..!! உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவு..!!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று கனகராஜ் சகோதரர் தனபால் செய்தியாளர் சந்திப்பின்போது கூறி வருகிறார்.
மேலும், தனது சகோதரர் கொலை செய்யப்பட்டார் என்றும் கொடநாடு குறித்து வெளியில் பேச கூடாது என மிரட்டல் வருவதாக கூறி, எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பல்வேறு பரபரப்பான தகவலை தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புப்படுத்தி பேசிவரும் கார் ஓட்டுநர் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனது செல்வாக்கை குறைக்கும் வகையில் தனபால் பேசி வருவதாகவும், கொடநாடு வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச கனகராஜனின் சகோதரர் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் 1பி ள்ளி10 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடக்கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கில், தனபால் 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..