காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி ஒப்பந்தம் விவகாரத்தில் திமுக நாடாளுமன்றத்தில் உள்ள தனது 38 எம்பிக்கள் மூலம் கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தோம், தமிழ்நாட்டின் உணவு தேவைகளை பூர்த்தி செய்வது டெல்டா மாவட்டம், இதில் விவசாயிகள் பாதிக்க கூடிய எந்த ஒரு தொழிற்சாலையும், அமைக்க கூடாது என்பதுதான் வேளாளண் பாதுகாப்புச் சட்டத்தில் முக்கிய அம்சம். திமுக தனது 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூலமாக நாடாளுமன்றத்தில் சிறப்பு கவன இருப்பு தீர்மானத்தை கொண்டு வந்து நிலக்கரி சுரங்கம் திட்டத்தை கைவிட வலியுறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
இல்லாவிடில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் மாறிடும் இந்த அறிவிப்பால் விவசாயிகள் அச்சத்தில் இருக்கக்கூடிய நேரத்தில் நாடாளுமன்றத்தில் இது குறித்து எழுப்ப வேண்டும் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்
நான் டெல்டா மாவட்டத்துக்காரன் எனக் கூறக்கூடிய முதலமைச்சர் தான் கடந்த 2006-11 ஆட்சியில் தான் மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது முதல் இப்போது வரை விவசாயத்திற்கு எதிராக திமுக உள்ளது.
காவிரி விவகாரத்தில் நாங்கள் மத்திய அரசுடன் கூட்டணி இருந்தபோது 3 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அப்போது இந்த விவகாரத்தை வலியுறுத்தி 22 நாட்கள் நாடாளுமன்றம் ஒத்துவைக்கப்பட்டது, காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தோம் என தெரிவித்தார்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளிக்க மத்திய அமைச்சர் டெல்டா மாவட்டத்தில் மூன்று நிலக்கரி சுரங்கள் வரப்போவதாக அறிவித்த நிலையில் இதனை திமுக முன்னரே தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்
இந்த திட்டத்தை ரத்து செய்வதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமூச்சாக ஈடுபட வேண்டும்- எனவும் நான் முதலமைச்சராக இருந்து போது நான் கடிதம் மட்டுமே எழுதுவதாக குற்றம் சாட்டிய அப்போதே எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் இப்போது பிரதமருக்கு கடிதம் எழுதுவது ஏன் என குற்றம் சாட்டினார்