முக கொழுப்பு குறைக்க இதை செய்யனும்..!
உடல் எடை கூடினால் கைகள், கால்கள், தொடை, வயிறு மற்றும் கழுத்து பகுதிகளில் அதிகபடியான கொழுப்புகள் கூடுகிறது. அப்படி கழுத்து பகுதிகளில் கொழுப்புகள் சேரும்போது தாடை அழகாக இருக்காது, அப்படி சேர்ந்த கொழுப்புகளை எப்படி குறைப்பது என பார்க்கலாம் வாங்க.
- நீர் பற்றாக்குறையால் முகத்தில் கொழுப்புகள் சேரத் தொடங்குகிறது இதனால் அன்றாடம் நான்கு லிட்டர் தண்ணீர் குடித்து உடலை ஈரப்பதமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
- உடலுக்கு நன்மை அளிக்கும் காய்கறிகள் மற்றும் துரித உணவுகளை தவிர்த்து சாப்பிடுவது நன்மை அளிக்கும். உணவில் சர்க்கரை மற்றும் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.
- தூக்கம் சரியாக இல்லையென்றாலும் முகத்தில் சதை போடும், தினமும் எட்டு மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும்.
- உடற்பயிற்சியாக வாயின் கீழ் பகுதியை முன்னும் பின்னும் அசை போவதால் கொழுப்பதை கரைக்கலாம். இதனை 10 முறை தினமும் செய்ய வேண்டும்.
- அடிக்கடி நாக்கால் மூக்கை தொட முயற்சி செய்யலாம். இதனால் முகத்தில் நல்ல மாற்றம் தெரியும்.
- கழுத்தை இடது பக்கம் திருப்பி கீழ் தாடையை அசைக்க வேண்டும். இதனாலும் முகத்தில் இருக்கும் சதை கரையும்.
- பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள், கார்போஹைட்ரேட்டுகள் முகத்தில் கொழுப்பை சேர்க்கும் என்பதால் இதையும் தவிர்க்க வேண்டும்.
- கார உணவுகள் அதிக அளவு உப்பை கூட்டி நீர் தேக்கத்தை முகத்தில் உண்டாக்கும், எனவே காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.
- மன அழுத்தம் ஹார்மோனை சுரப்பதால் முகத்திற்கு கொழுப்பு அதிகரிக்கிறது. எனவே மன அழுத்தம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
- முக கொழுப்பிற்கு உடல் எடை அதிகரிப்பும் முக்கிய காரணமாக இருக்கும் எனவே உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.