மீசை மற்றும் தாடி வேகமாக வளர..!
புரோட்டீன் நிறைந்த உணவுகள்:
உடலின் ஆரோக்கியத்திற்கும் மீசை தாடி வளர்ச்சிக்கும் தொடர்பு உள்ளது. புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
மீன்,முட்டை,பால்,பீன்ஸ் ஆகியவற்றை நிச்சயமாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
விளக்கெண்ணெய்:
விளக்கெண்ணெய் கொண்டு மீசை மற்றும் தாடியில் மசாஜ் செய்து வர அங்குள்ள முடி அடர்த்தியாக வளரும்.
தூக்கம் மிக முக்கியம்:
தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம்.தூக்கம் இல்லாததால் தான் ஒருவருக்கு ஆரோக்கியத்தில் பலவித பிரச்சனைகள் உண்டாகிறது. மீசை தாடி வளர்ச்சிக்கும் தூக்கம் மிகவும் அவசியமானது.
டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்:
டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் உடலில் குறைவாக இருந்தாலும் முடி வளர்ச்சியில் பாதிப்பு உண்டாகும். இந்த ஹார்மோண் தான் முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
முட்டை,எள்,மீன்,வேர்க்கடலை ஆகியவற்றை சாப்பிடுவதால் இந்த ஹார்மோன் அதிகரிக்கும்.
இயற்கை ஹேர் க்ரீம்:
மீசை மற்றும் தாடி நன்கு வளர கற்றாழைஜெல்,ஆப்பிள் சிடர் வினிகர்,ரோஸ்மேரி ஆயில் ஆகியவற்றை கலந்து முடியின் மேல் தடவி 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின் அலசி வர வேண்டும்.
தண்ணீர்:
உங்களது உடம்பில் வறட்சி அதிகமாக இருந்தால் அது முடி வளர்ச்சியை தடுக்கும். இதனால் தினசரி குறைந்தது 4 லிட்டர் நீர் குடிக்க வேண்டும்.
மன அழுத்தம்:
மன அழுத்தம் ஒருவருக்கு அதிகமாக இருந்தால் அவர்களுக்கு மீசை மற்றும் தாடி வளர்வதில் தாமதம் உண்டாகும். இதனால் நரை முடியும் அதிகமாகலாம்.
