இறந்த தாய்மாமனின் உருவச்சிலையின் மடியில் அமரவைத்து காதணி விழா நடைபெற்றுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சேர்ந்தவர் சவுந்தர பாண்டி. இவரது மனைவி பசுங்கிளி. இந்த தம்பதிக்கு பாண்டித்துறை என்ற மகனும், பிரியதர்ஷனி என்ற மகளும் உள்ளனர்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்து ஒன்றில் பாண்டித்துறை உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், அவருடைய மூத்த சகோதரி பிரியதர்ஷினியின் மகள் தாரிகா ஸ்ரீ. மகன் மோனேஷ் குமரன் ஆகியோரது காதணி விழா ஒட்டன்சத்திரத்தில் இன்று(மார்ச்.14) நடைபெற்றது.
பாண்டித்துரை இறந்து போனதால் அவருடைய சிலிக்கன் உருவச் சிலையை வைத்து தாய்மாமன் செய்முறைகள் செய்யப்பட்டு அவரது சிலையின் மடியில் வைத்து குழந்தைகளுக்கு காது குத்தப்பட்டது.
இதற்கு முன்னதாக தாய்மாமன் மெழுகு சிலை குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக திருமண மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டது.
பாண்டித்துரை இறப்பதற்கு முன்பு தனது அக்காவிடம் உனது குழந்தையை எனது மடையில் வைத்துத்தான் காதணி விழா நடத்த வேண்டும் என கூறிவந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, பாண்டித் துரையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் 5 லட்சம் ரூபாய் செலவில் சிலை செய்து குழந்தைகளுக்கு காதணிவிழா நடத்தி மகனின் ஆசையை நிறைவேற்றியதாக குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவம் ஒட்டன்சத்திரம் பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.