பள்ளி மாணவர்களிடம் சாதி பெயரை கேட்பதாக வெளியான தகவல் தவறானது என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை என்றும், மாறாக அப்பள்ளிகள் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக கொண்டவையாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “பள்ளி மாணவர்களிடம் சாதி பெயரை கேட்பதாக வெளியான தகவல் தவறானது. பள்ளிகளில் எம்.பி.சி, பி.சி. என்ற பிரிவுகளை தான் பதிவு செய்கிறோம்.
திமுக ஆட்சி அமைந்தவுடன் சாதி குறித்து பள்ளிக் கல்வித்துறையில் விருப்ப அடிப்படையிலேயே பதிவு செய்யப்படுகிறது. சில அரசு பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழி வகுப்பு இல்லை என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்”, என தெரிவித்துள்ளார்.