மழைக்காலத்தை கையாள பயன்படும் குறிப்புகள்..!
தேங்கும் நீரில் நடத்தல் கூடாது:
மழைக்காலங்களில் சாலையில் தேங்கியிருக்கும் தண்ணீரில் கெட்ட பாக்டீரியாக்கள், வைரஸ் ஆகியவை இருப்பதற்கு வாய்ப்பு அதிகம், எனவே சாலையில் நடப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
முக்கியமான விஷயத்திற்கு சென்றிருந்தாலும் வீட்டிற்கு வந்தவுடன் கை மற்றும் கால்களை சோம்பு போட்டு சுத்தமாக கழுவிய பின் வீட்டிற்குள் செல்லுதல் வேண்டும்.
மின்சார கம்பியை கவனிக்கவும்:
அதிக மழைக்காலங்களில் மின்சார கம்பியானது பல இடங்களில் அறுந்து தொங்கி இருக்க வாய்ப்பு அதிகம்.
எனவே சாலையில் போகும்போது மின்சார கம்பிகளை தொடுவதோ, விளையாடுவதோ கூடாது, அப்படி செய்தால் அது உயிருக்கே பெரிய ஆபத்தாக முடியும்.
வண்டியை கவனமாக ஓட்டவும்:
மழைக்காலங்களில் சாலையில் வண்டியை கவனமாக ஓட்ட வேண்டும். சாலையானது சுலபமாக வழுக்கும் தன்மை கொண்டது.
எனவே வண்டியில் வேகமாக செல்லாமல் கவனமாக மெதுவாக செல்ல வேண்டியது மிகவும் முக்கியம்.
கொசுக்களிடம் இருந்து பாதுகாப்பு:
மழைக்காலத்தில் கொசுக்களின் எண்ணிக்கையானது அதிகரித்து டெங்கு, மலேரியா போன்ற நோய்களை சுலபமாக வரவைக்கும்.
எனவே அவற்றில் இருந்து விடுபட வீட்டில் ஸ்ப்ரே, கொசு அடிக்கும் பேட் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், மேலும் வீட்டில் ஜன்னை மூடி வையுங்கள், ஜன்னலுக்கு நெட், ஸ்கிரீன் ஆகியவற்றை பயன்படுத்துங்கள்.
எலக்ஸ்ரானிக் பொருளில் கவனம்:
மழை அதிகமாக உள்ள காலங்களில் வீட்டில் இருக்கும் மின்சார பொருட்களை துண்டித்து தனியே எடுத்து வைப்பது மிகவும் முக்கியம்.
மழையில் மின்சாரமானது குறைவாகவும் அதிகமாகவும் வர வாய்ப்பு உண்டு, இதனால் வீட்டில் இருக்கும் விலையுயர்ந்த மின்சார பொருட்கள் பாதிக்காமல் பாதுகாக்கலாம்.
அவசரக்கால கிட்ஸ்:
அதிக மழைக்காலங்களில் அடிக்கடி மின்சாரமானது துண்டிப்பு அடைய வாய்ப்பு அதிகம். அதிக மழையின் காரணமாக வீட்டுக்குள் வெள்ளம் வரவும் வாய்ப்பு அதிகம்.
எனவே மெழுகுவர்த்தி, டார்ச், ஆயின் மெண்ட், பஞ்சு, கொசுக்களை விரட்டும் கிரீம், உடைகள், மருந்துகள் ஆகியவற்றை எமர்ஜென்சி கிட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ரெயின்கோட், குடை அவசியம்:
மழைக்காலங்களில் ரெயின்கோட் மற்றும் குடை பயன்படுத்துவது மிக முக்கியமான ஒன்றாகும். இவற்றை பயன்படுத்துவதால் மழை காலத்தில் வரும் நோய் தொற்றுக்களிலிருந்து நம்மை பாதுகாக்கலாம்.
உங்களுக்கு முக்கியமான பொருட்களை பிளாஸ்டிக் பையில் வைத்து கொண்டுபோவதினால் அதனை நனையாமல் பாதுகாக்கலாம்.