குடிக்கார கணவன்… கொடுமை தாங்க முடியாமல் மனைவி செய்த செயல்..!
மதுரை மாவட்டம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (36). வெளிநாட்டில் பணியாற்றி வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு திரும்பினார்.
அதன்பின் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி கனிமொழி (30) என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் 2 மகன்களும் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாகவே கார்த்திக் மது பழக்கத்திற்கு அடிமை ஆனதால் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மேலும் மனைவியிடம் தகறாறில் ஈடுப்பட்டதுடன் குழந்தைகளையும் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
இதேபோன்று சம்பவ நாளன்றும் கார்த்திக் மது அருந்தி விட்டு மனைவி மற்றும் குழந்தைகளை தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கனிமொழி வீட்டில் இருந்த தோசை கல் மற்றும் சப்பாத்தி கட்டையால் தன்னுடைய கணவரை தாக்கினார்.
அதன் பின்னும் ஆத்திரம் அடங்காததால் அரிவாள் மனையால் அவரை வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து கார்த்திக் உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீரைத்துரை போலீசார் கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வழக்கு பதிவு செய்து கனிமொழியை அவர்கள் கைது செய்தனர். குடிப்போதையில் வந்த கணவரின் கொடுமை தாங்கமுடியாமல் மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்