குடிபோதையில் பெண் செய்த செயல்..!! விசாகப்பட்டினத்தில் பரபரப்பு..!!
இப்படியும் விபத்து ஏற்படுமா என நினைக்க வைக்கும் வகையில் பல பைக்குகளை பந்தாடி காரை மரத்தில் மோதி விபத்தை ஏற்படுத்திய பெண்.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்னோவோ ( Innova Car ) கார் ஒன்று அதிவேகத்தில் சென்றுள்ளது. அந்த கார் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது இடித்து.., மோட்டார் வாகனங்களை தூக்கி வீசியுள்ளது.
அதில் எட்டு இருசக்கர வாகனங்கள் மீது காரை ஏற்றி நசுக்கியுள்ளது. இதை எல்லாம் சேத படுத்தி விட்டு தெருவோரம் நின்ற ஒரு மரத்தின் மீது மோதி நின்றுள்ளது.
எந்த உயிருக்கும் சேதம் இல்லை என்றாலும் வலி முழுவதும் உள்ள கார் மற்றும் பைக் களை சுக்குநூறாக உடைத்து, போதையில் அதிவேகத்தில் காரை ஓட்டியுள்ளார். சேதமடைந்த வாகனத்தின் உரிமையாளர்கள், அந்த காரின் கதவை திறந்த போது தான் அந்த பெண் மிதமிஞ்சிய போதையில் இருந்து தெரிய வந்துள்ளது.
எனவே அந்த பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்துத்துள்ளனர்.., தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் அப்பகுதி மக்களிடையே விசாரணை செய்து விட்டு.., போதையில் இருந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
Discussion about this post