“திருப்பதி லட்டுக்குள் கிடந்த போதைப்பொருள்…” அதிர்ச்சியில் பக்தர்கள்..!! புனிதம் கெட்டுபோனதா…?
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் எண்ணெய் கலந்த நெய் உபயோகப் படுதப்பட்டிருப்பதாக ஒரு சர்ச்சை வெளியாகி பலரையும் அதிர்ச்குள்ளாக்கியது. இந்த சம்பவம் ஓய்வதற்குள் அடுத்த ஒரு சர்ச்சையாக இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது…
புனித திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டுவில் உபயோகப்படுத்தபடும் நெய்யில்., மாட்டு கொழுப்பு., பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்த நெய்யை உபயோகபடுத்தி இருப்பதாக பெரும் சர்ச்சை கிளம்பியது..
இந்த கலப்படம் ஆனது… ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் நடத்தப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்காக குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாடு வாரியத்தின் கீழ் இயங்கும் ஆய்வகதிற்கு லட்டுவின் மாதிரி சாம்பிள்கள் கொண்டு செல்லப்பட்டு உறுதி செய்யப்பட்டது., ஆய்வின் முடிவில் மாட்டு கொழுப்பு., பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்திருப்பது உறுதியானது.., அதன் பின் லட்டு தயாரிக்க நெய் அனுப்பிய திண்டுக்கல் நிறுவனத்தை திருப்பதி தேவஸ்தான போர்டு பிளாக் லிஸ்ட்டில் வைத்துள்ளது.
மறுபக்கம் விலங்கு கொழுப்புகள் பயன்படுத்தியதால்., தோஷங்கள் நீக்கி பரிகார பூஜை செய்வதற்காக வேலைகள் நடந்து கொண்டிருந்தாலும் இந்த சர்ச்சைகான ஒரு முடிவு இன்னும் கிடைக்கவில்லை என சொல்லலாம் இப்படி இருக்க மற்றொரு சர்ச்சை கிளம்பியுள்ளது…
நேற்று முன்தினம் தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கொல்லகூடேம் பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி என்பவர் திருப்பதி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அதன்பின் பிரசாதமான லட்டுவை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது குட்கா பாக்கெட் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளது.., வீடியோவாக சமுக வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்., இது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
https://twitter.com/i/status/1838171484067598381
மேலும் இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான குழுவினரிடம் விசாரணை செய்ய கொல்லகூடேம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்… இந்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து நெட்டிசைன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.. மேலும் திருப்பதியின் புனித பெயர் கெட்டுபோய் விட்டதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..